Thursday, 27 September 2012

[Lovers India] தற்போதைய செய்தி

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் முக்கிய ஆலோசனை : மாலைக்குள் இறுதி முடிவு வெளியாகும் என தகவல்

பதிவு செய்த நாள் - September 27, 2012 8:59 am

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டக் குழு சார்பில், இடிந்தகரையில் முக்கிய ஆலோசனை நடந்து வருகிறது. எதிர்காலத்தில் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தை எந்த வகையில் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

இந்த மாநாட்டில், போராட்டக் குழுவினருக்கு ஆதரவு தெரிவிக்கும் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் அடுத்தகட்டப் போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. முக்கிய முடிவுகள் இன்று மாலையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுககிறது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி நடந்து வரும் போராட்டம் 400 நாட்களுக்கும் மேலாக நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் நீடி்தது வருகிறது. அதன் ஒரு கட்டமாக, நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று மணலில் பாதியளவு புதைந்து போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்ப்பாளர்களை இணைக்க திட்டம் : கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான அரசியல் கட்சிகளையும், சமுதாய அமைப்புகளையும் ஓர் அணியில் திரட்ட அணுமின் நிலைய எதிர்ப்புக் குழு திட்டமிட்டுள்ளது.  எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை ஒருங்கிணைந்து எதிர்கொள்வது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



2012/9/27 kumar a <kumarckm.msc@gmail.com>

பொதுமக்கள் பாதுகாப்பில் சமரசம் கிடையாது : கூடங்குள விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

பதிவு செய்த நாள் - September 27, 2012 1:28 pm

கூடங்குளம் அணுஉலைக்கு சுற்றுச்சூழலுக்கான தடையில்லா சான்றிதழ் வழங்கியது தொடர்பாக, ஒருவார காலத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதில் சமரசம் இல்லை என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், தேவைப்பட்டால் அணுஉலையை மூடவும் உத்தரவிடப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

கூடங்குள அணுஉலை தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பூவுலகின் நண்பர்கள் இயக்கம் சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜரானார். அவர் 4 முக்கிய வாதங்களை முன் வைத்தார். கூடங்குளம் அணுமின்நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் கழிவை நிலத்தடியில் தேக்கினால், அதனால் நிலத்தடி நீரில் கதிர்வீச்சு தாக்கம் ஏற்படும், அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கடலில் கலக்கும் போது, அதன் வெப்பத்தின் அளவு காரணமாக கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் ஆகியன பிராசாந்த் பூஷன் முன் வைத்த வாதங்களாகும்.

அவரது வாதங்களை கேட்ட நீதிபதிகள், கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்க எத்தனை கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது என்பது குறித்து கவலை இல்லை, மக்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்ய முடியாது. மேலும் கடலில் அணுமின்நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை கலப்பதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து மத்திய சுற்றுச்சூழல்/ வனத்துறை அமைச்சகம் சார்பில் வக்கீல் ஒருவர் ஆஜராகி வருகிற வியாழக்கிழமையன்று வாதாட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். தேவைப்பட்டால் அணுஉலையை மூடவும் உத்தரவிடப்படும் என்றும் எச்சரித்தனர்.

போராட்டக்குழு வரவேற்பு : உச்சநீதிமன்றத்தின் இந்த கருத்திற்கு கூடங்குள அணுமின்நிலைய எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப உதயகுமார் வரவேற்பு தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் இந்த நிலைப்பாட்டினை மத்திய , மாநில அரசுகள் மதித்து நடக்க வேண்டும். பொதுமக்கள் மீது அக்கறை காட்டியுள்ள உச்சநீதிமன்றத்தின் இந்த கருத்து மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் போல் செயல்படாமல் , உச்சநீதிமன்றம் மக்கள் நலனை கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்கும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

http://puthiyathalaimurai.tv/new/?p=34026

--



 


-----------------------------------------------------

 

 


 

------------------------------- 
 
 
((¨`·.·´¨)
`·.¸(¨`·.·´¨)           
(¨`·.·´¨)¸.·´           
`·.¸.·´என்றும் 
        அன்புடன்
                 
   *¤*.¸¸.·´¨`»*«´¨`·.¸¸.*¤*
  *¤*.¸¸.·´¨`»**சாந்தகுமார்**«´¨`·.¸¸.*¤*
             «`¨´·.¸¸.*¤*.¸¸.·´¨`» 

 





--



 


-----------------------------------------------------

 

 


 

------------------------------- 
 
 
((¨`·.·´¨)
`·.¸(¨`·.·´¨)           
(¨`·.·´¨)¸.·´           
`·.¸.·´என்றும் 
        அன்புடன்
                 
   *¤*.¸¸.·´¨`»*«´¨`·.¸¸.*¤*
  *¤*.¸¸.·´¨`»**சாந்தகுமார்**«´¨`·.¸¸.*¤*
             «`¨´·.¸¸.*¤*.¸¸.·´¨`» 

 


--
You received this message because you are subscribed to the Google
Groups "Lovers India" group.
To post to this group, send email to loversindia@googlegroups.com
To unsubscribe from this group, send email to
loversindia+unsubscribe@googlegroups.com
http://groups.google.co.in/group/loversindia

No comments:

Post a Comment