Monday, 26 March 2012

[Lovers India] நாளை முதல் 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் கிடைக்கும் - தமிழக அரசின் புதிய அறிவிப்பு

இன்றைய செய்திகள்: 


தமிழகத்தில் பெரும் மின்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள இந்நிலையில் நாளை முதல் இடைவிடாது மின்சாரம் கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மின்தடையால் பாதிக்கப்பட்ட பெரிய தொழிற்சாலைகள்(big factory) முதல் சிறு, குறு தொழில்கள்(small factory) செய்து வருபவர்களை கடுமையாக பாதித்திருக்கும் மின்வெட்டுப் பிரச்னை சரிசெய்யப்பட்டு நாளை முதல் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்படும் என தமிழக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனக்குச் செய்தியைக் கேட்டதும் நம்பவே முடியவில்லை. இது ்ஜெயா டி.வி செய்தி. ஒரு வேளை பொய்யா இருக்குமோ.. எதுக்கும் சன் டி.வி செய்தியை வச்சுப் பார்த்துடுவோம்.

சன் டி.வி. செய்திகள்

வணக்கம். முக்கியச் செய்திகள்.. தமிழகத்தில் பரவலாக காணப்பட்ட மின்தட்டுப்பாடு நாளை முதல் சரிவர அனைத்துப் பகுதிகளுக்கும் கிடைக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 24 மணி நேரமும் இடைவிடாது மின்நுகர்வோர்கள் மின்சாரத்தை வழங்க தமிழக அரசு அவசரகால சட்டம் பிறப்பித்துள்ளது..

ஐயோ.. நம்பவே முடியலியே...

உண்மையா இதெல்லாம் உண்மையா இருக்குமோ எதுக்கும் வானொலியைத் திருகி செய்தியைக் கேட்டுடுவோம்..

வானொலியிலும்(Radio) அதே செய்திதான் முதன்மையான செய்தி,

பிரபல நாளிதழல்களிலும் அதே செய்து முகப்பு பக்கத்தில் வந்திருந்தது.

மனசு மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆர்ப்பரித்தது.

"தம்பி எழுந்திருடா.. கரண்ட் கட்(Power cut) ஆகிடுச்சு. எழுந்துரு.. பாரு. உடம்பெல்லாம் தெப்பலா நனைஞ்சுடுச்சு.. எழுந்து போய் வெளிய கட்டில் எடுத்துப்போட்டு தூங்கு.. மறுபடியும் கரண்ட் எப்ப வரும்னே தெரியல. இந்த கரண்டுக்காரனுக்கு எப்ப விடிவுகாலம் வரும்னே தெரியல"

அப்பா இப்படிச் சொல்லி எழுப்பியதுமேதான் எனக்கு கண்டதெல்லாம் கனவு என்று தெரிந்தது.

நான் கண்ட கனவு பலிக்குமா? என்ற எண்ணத்துடனே வெளியில் கட்டில் எடுத்துப் போட்டுத் தூங்கினேன்.  நல்ல காற்றோட்டத்துடன் வெட்ட வெளியில் படுத்து தூங்குவதும் ஒரு சுகம்தான்.. ஆனால் நகரவாசிகளுக்கு?!!!!!
--

Best Compliments from,

Vinoth Subramanian B.E.,

Mobile:0091-9585705700 (INDIA)

         00971-501099284 (U.A.E)

         


--
You received this message because you are subscribed to the Google
Groups "Lovers India" group.
To post to this group, send email to loversindia@googlegroups.com
To unsubscribe from this group, send email to
loversindia+unsubscribe@googlegroups.com
http://groups.google.co.in/group/loversindia

No comments:

Post a Comment