Thursday, 29 December 2011

[Lovers India] [TAMIL]காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து./.இதயத்தைத் துளைக்காதே!/- டாக்டர் ஹர்ஷவர்தன்.






 

 


காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து./.இதயத்தைத் துளைக்காதே!/- டாக்டர் ஹர்ஷவர்தன்.

 

இதயத்தைத் துளைக்காதே!

ஜிஜி

-- டாக்டர் ஹர்ஷவர்தன். 

ள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 45 வயது வெள்ளைக்கண்ணு, மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ரியாத்தில் ஏழு ஆண்டுகளாக வேலை செய்துவந்தார்.  கடந்த பிப்ரவரி மாதம் சொந்த ஊருக்குத் திரும்பினார். ஊருக்கு வந்த அன்று ஆரம்பித்த காய்ச்சல், தொடர்ந்து ஒன்பது மாதங்களாக விடவில்லை. காய்ச்சலுக்காக அருகிலிருந்த டாக்டர்களிடம் மாற்றி மாற்றி மருந்து சாப்பிட்டும் காய்ச்சல் விட்டபாடில்லை.


"
காய்ச்சலோட எதுவும் சாப்பிட முடியல. எது சாப்பிட்டாலும் ஒரு மணி நேரத்துல வாந்தி வந்துடும். வெறும் பாலும் தண்ணியும்தான். உடம்பு பலகீனமாயிடுச்சிஎன்று சொல்லும் வெள்ளைக்கண்ணுவின் உடல்நிலை, கடந்த நவம்பர் 4ம் தேதி மூச்சு கூட விட முடியாத அளவுக்கு  மிகவும் மோசமானது. அவசரமாக சிகிச்சைக்காக புதுச்சேரிக்கு அழைத்துச் சென்றார்கள். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், 'மிகவும் அபூர்வமான ஒரு பாக்டீரியா தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளார்.  இன்று இரவே அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பிழைப்பது கஷ்டம். நீங்கள் சென்னைக்குப் போய்விடுவது நல்லது'என்று சொல்லிவிட்டார்கள்.


பிறகு, சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் வெள்ளைக்கண்ணுவிற்குத் திறந்த இதய அறுவைச்சிகிச்சை நடந்தது. சிகிச்சைக்குப் பிறகு, வெள்ளைக்கண்ணு நலமா இருக்கிறார். அறுவைச் சிகிச்சை செய்த எஸ்.ஆர்.எம். மருத்துவமனையின் இதய நுரையீரல் பிரிவுத் தலைவர் டாக்டர் கே. ஹர்ஷவர்தனைச் சந்தித்துப் பேசினோம்.


"
நவம்பர் 4ம் தேதி மாலை, புதுச்சேரி டாக்டர்களே எனக்கு போன் செய்து பேசினார்கள். 'இவருக்கு புரூசெல்லோசிஸ் (brucellosis) மாதிரி தெரியுது. இங்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடியாது. நீங்கள் முயற்சி செய்கிறீர்களா?' என்று கேட்டார்கள். 'சரி, உடனடியாக அனுப்புங்கள்' என்றேன். தொடர்ந்து 9 மாதங்களாக ஜுரம் இருந்ததற்குக்  காரணம், புரூசெல்லோ என்ற பாக்டீரியா. கால்நடைகள் மூலம் பரவும் இந்த நுண்ணுயிரி, உடலின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் பாதிக்கலாம். இந்தக் கிருமி வெள்ளைக்கண்ணுவின் இதயத்தில் போய் தங்கிவிட்டது. அவரின் இதயத் தசைகளைப் பாதித்து இதயத்தின் பிரதான இதய வால்வுகளான அயோட்டா, மைட்ரல் போன்ற 3 வால்வுகளில் துளைகளை ஏற்படுத்தி இருந்தது. மற்ற வால்வுகளில் தீவிர நோய்த் தொற்றை ஏற்படுத்திவிட்டது. இரவு 10 மணிக்கு அவரைக் கொண்டு வந்தார்கள். தொடர்ந்து ஏழு மணி நேரம் அறுவைச் சிகிச்சை செய்து பாதிக்கப்பட்ட அயோட்டா வால்வை நீக்கி, அதற்குப் பதிலாக செயற்கை வால்வைப் பொருத்தினோம். அறுவைச் சிகிச்சையின்போது, மற்ற உடல் பாகங்களுக்கு ரத்த ஓட்டப் பாதிப்பு ஏற்படாமல் இதயத் துடிப்பை மட்டும் நிறுத்தி, இந்தச் சிக்கலான அறுவைச் சிகிச்சையைச் செய்தோம். பாதிக்கப்பட்ட மற்ற வால்வுகளில் உள்ள குறைகளையும் பிறகு சரி செய்தோம்.


சிகிச்சைக்குப் பிறகு, கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட்டில் வெள்ளைக்கண்ணுவின் ரத்தத்தைப் பரிசோதனைசெய்து, எந்த நோய்த் தொற்றும் தற்போது அவர் உடலில் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு அவரை டிஸ்சார்ஜ் செய்தோம். இனி அவருக்கு அந்த நுண்ணுயிரியின் மூலம் எந்தப் பாதிப்பும் இருக்காது.  சராசரி வாழ்க்கையை இனி அவர் வாழலாம். அரசு மருத்துவமனையில் 30 ஆண்டுகள் பணி செய்த அனுபவம் உள்ள எனக்கு, இதைவிட சிக்கலான அறுவைச் சிகிச்சை எல்லாம் செய்துள்ளதால் இந்தச் சிகிச்சை எளிதாக இருந்தது. நம் நாட்டில் இந்தக் கிருமியின் தொற்று மிக அபூர்வம் என்றாலும் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். சென்னையில் செய்த இந்த அறுவைச் சிகிச்சை பற்றி சர்வதேச மருத்துவ இதழில் எழுத உள்ளேன்" என்றார் டாக்டர் ஹர்ஷவர்தன்.


வெல்டன் சார்..!

காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து...

டாக்டர் ஹர்ஷவர்தன் சொன்னார்: "வெள்ளைக்கண்ணுவிற்கு ரியாத்தில் ஒரு வயலில் வேலை. அங்கு விளையும் காகறிகளை விற்பனைக்கு அனுப்புவதும் பண்ணையில் மாடுகளைப் பராமரிப்பதும் அவரின் தினப்படி வேலை. பாலைக் காச்சாமல் அப்படியே குடிப்பது அவரின் பழக்கம். காய்ச்சாத, பதப்படுத்தப்படாத பாலில் புரூசெல்லோ பாக்டீரியாக்கள் இருக்கும். இந்தக் கிருமி தாக்கிய மாடுகள் கருவுற்றால் 2 மாதங்களில் அப்படியே கரு சிதைந்து, தானாகவே வெளியில் விழுந்துவிடும். இதனை நாய், பன்றி போன்ற உயிரினங்கள் சாப்பிடும் அவற்றின் மூலம் மனிதர்களுக்கும் வந்துவிடும். நம் நாட்டில் இப்படிப்பட்ட கால்நடைகளைக் கவனித்து, ஏன் கரு தங்கவில்லை என்று உடனடியாக கால்நடை டாக்டரிடம் காட்டி சிகிச்சை செய்து விடுவார்கள். பச்சை இறைச்சி சாப்பிட்டாலும் இந்த நுண்ணுயிரி தாக்கும் அபாயம் உண்டு. வறட்டி தட்டுபவர்களுக்கும் வரலாம். இதயம் மட்டுமல்ல மூளை, நரம்பு மண்டலம் என்று உடலின் எந்தப் பாகத்தை வேண்டுமானாலும் இது தாக்கலாம். எந்த இடத்தில் போய் தங்கிவிடுமோ அந்த உறுப்பை, தசைகளை, எலும்பை  கொஞ்சம்கொஞ்சமாக அழித்துவிடும்" என்கிறார்.

 

--

 

 


ALWAYS KEEP SMILING

ALWAYS KEEP_MAILING

Just click here


M.YUSUF
COONOOR
THE NILGIRIS




--
You received this message because you are subscribed to the Google
Groups "Lovers India" group.
To post to this group, send email to loversindia@googlegroups.com
To unsubscribe from this group, send email to
loversindia+unsubscribe@googlegroups.com
http://groups.google.co.in/group/loversindia

No comments:

Post a Comment